வறுமையின் தாக்கமா அன்னையின் ஏக்கமா
சுள்ளி பொறுக்கி சுடுநீர் காய்ச்சி
சுடுமா சுடாதா என்று பார்த்து
பார்த்து பக்குவமாய் குளிப்பாட்டி
தலை சீவி பவுடர் பூசி
இன்முகம் காட்டி இன்னது பிடிக்கும்
இன்னது பிடிக்காது என்று
பார்த்து பார்த்து சோறு ஊட்டி
வளர்த்து விட்ட என் அன்னை
இன்று அனைவர்க்கும்
சோறாக்கி உணவளித்து
வேலைக்கு அனுப்பிவிட்டு
சட்டியை பார்த்தால் ஒரு
பருக்கை கூட இல்லை
ஒரு குவளை தண்ணீர் குடித்தாள்
தாகம் தீர்ந்தது ஆனால்
அவள் ஏக்கம் தீரவில்லை !
வறுமையின் தாக்கமா இல்லை
அன்னையின் ஏக்கமா !