தாயின் மடி
மயக்கம் வேண்டுகிறேன் தாயே
உன் மடியில் நான் உறங்க!
தாயை போல் சேய் என்கிறார்கள்
தாயே நான் உன் சேய்
என்றொரு வார்த்தை சொல்லிவிட மாட்டயா!
பத்து மாதம் - எனை
நீ சுமந்தாய்
பற்றே இல்லமால்
பற்ற வைத்து விட்டாயே
நம் பந்தத்தை!
எனை சுமந்தது உன் குற்றமா?
உன் சுமையாக இருந்தது என் குற்றமா?
நீ செய்த முற்பிறவியின் வினையால்
இப்பிறவியில் எனக்கு ஏன் தண்டனை?
நிலாசோறு ஊட்டுவர் குழந்தைக்கு
முடிந்தால் நான் நிலவிற்கே சென்று சாப்பிடாலாம்
ஊட்டிவிட எனக்கொரு தாய் அங்கிருப்பளா?
எங்கே இருக்கிறாயென ஏங்குகிறேன்
இனியாவது உன் மடியில்
நான் உறங்க நீ எனை தாலாட்ட!
அன்னை என்ற சொல்லுக்கு
அன்று நீ அர்த்தம் தந்திருந்தால்
இன்று நான் அனாதை என்ற சொல்லுக்கு
அர்த்தம் தேடியிருக்க மாட்டேன்!
இனியாவது ஒரு மயக்கம் வேண்டுகிறேன் தாயே
உன் மடியில் நான் உறங்க
கல்லறையெனும் மடியில் நான் தலை வைப்பதற்குள்!......