முந்தி வந்த புத்தாண்டே வருக வருக

செல்வங்கள் செல்லவே!
தேடல்கள் தொலையவே
அறியாமல் தொடுகிறது
புதியதோர் காற்று...

வா நண்பா வறுமையா?
இரு நண்பா பொறுமையாய்..
நாம் வந்தது என்னவோ வெறுமையாய்
உழைத்திடு மனிதா பெருமையாய்...

நிலம் பாதம்படா குழந்தையாகிடு
தினம் பதம்பட உழவனாகிடு
இன்பத்தினை கண்டு சோர்வாகிடு
சோற்றினை கண்டு துதிபாடிடு....

புதியதோர் உலகம் பிறக்குது பார்
உனக்கென வரலாறு எழுதிட துடிக்குது
ஆண்டு முழுவதும் புதுவசந்தம் தான் -இனி
பூக்களின் வாசம் கூட உன் வசம் தான்

மூதேவி யென திட்டுகிறது முழுமனதா?
மூடனாய் முடங்காதே முழுமனிதா
மனிதம் புரிந்திடு மாமனிதா
சுறுசுறுப்பாய் விழித்திடு
சுனாமிபோல் கிளம்பி வா..

உதவிடு ஆண்டே! உதவியாண்டே!!
தருகிறோம் பூச்செண்டே!
உனக்கென காத்திருக்கிறோம்
வா இன்றே!
மனிதனை போற்ற வருக!
முந்தி வந்த புத்தாண்டே வருக! வருக!!
.

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (7-Feb-15, 8:28 pm)
பார்வை : 1254

மேலே