தூது செல்வாய் வெண்ணிலாவே -காதல் தூது
மண்தொட்டு மறைந்திட்ட
மழைத்துளி போல்
அவன் விழி பட்டு சிதறிய
இதயம் இது ..!
தொலைத்திட்ட இடத்தில்
என் இதயமில்லை
சிதறிய தடயம் கூட
சிறிதும் இல்லை ..!
தென்றலாய் வருடி என்னை
சிலிர்க்க வைத்து
புயலாகி மனதை
பறித்து சென்றான் ..!
திருடியவன் சென்ற
திசையறியேன்
தேடிச் செல்ல அவன் வந்த
வழியறியேன்..!
தேய்கின்ற வெண்ணிலவே
கொஞ்சம் நில்லு
திருடனவன் உன் கண்ணில்பட்டால்
சேதி சொல்லு .
பார்வையால் பறித்துச் சென்ற
இதயத்தை
பக்குவமாய் அவனுக்குள் வைக்கச் சொல்லு ...
பாவை நான் காத்திருகின்றேன் என்றும் சொல்லு
அங்கு நீ பார்த்த அனைத்தையும்
எனக்கும் சொல்லு!!!!!!!!