ஈழத்தமிழருக்கு நீதி எங்கே
விதம் விதமாய்
வாகனமாம் வீதி எங்கும்
பவனி வருகின்றது பார்
ஆனால்
ஈழத்தமிழர் வாழ்க்கை
முள்ளுகம்பிகளுக்கு
மத்தியிலே
விண்வெளி ஆராய்ச்சியாம்
விண்வெளி பயணமாம் என்றெல்லாம் மனிதன்
வளர்ச்சிகள் போகுது பார்
ஆனால்
ஈழத்தமிழர் சிறைசாலையிலே
சிக்கி தவிக்கின்றார்கள்
சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் உலகெங்கும்
ஆனால்
எம் ஈழத்தில் இன்னமும்
கட்டாய கருகலைப்பும்
சிசு கொலையும் நடத்து கொண்டுதான்
இருக்கிறது.
சம உரிமையாம் உலகெங்கும்
ஆனால்
இன்னமும் ஈழத்தமிழன் அடிமையாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்......
பெண்கள் தாயுக்கு நிகராம்
ஆனால்
இன்னமும்
ஈழத்து பெண்ணினம்
இழிவு படுத்தப்பட்டு கொண்டே
தான் இருக்கின்றார்கள்...
விலை உயர்த்த நகைகளாம்
நாகரீக உடைகளாம்
ஆனால்
மானம் காக்க உடை இன்றி
உடல் கூனி கிடக்கின்றார் எம் மனிதன்....
மருத்துவர் சாதனையாம்
புது புது கண்டுப்பிடிப்பாம்
ஆனால்
மருந்து இன்றி ஈழத்தமிழர் மக்கள்
இறந்து கொண்டே போகின்றனர்
உழவு இயந்திரமாம்....
விவசாயிகளுக்கு உதவியாம்
ஆனால்
இன்னமும்
எத்தனையோ உயிர்கள்
உணவின்றி இறந்து கொண்டே தான்
இருக்கின்றார்கள் ஈழத்திலே
கணணியுகமாம் செய்மதிகளாம்
மனிதவிமான அமைப்புக்களாம்
உலகமே ஒற்றுமை பேணுகின்றதாம்
ஆனால்
இன்னமும் மத இனவெறி
சண்டைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.....
தொலைகாட்சியாம்.....
வானொலிகளாம் தொலைபேசிகள் என்றெல்லாம்
மனிதன் வளர்ச்சி அடைந்து விட்டான் இருந்தும் அவன்
ஆராய்ச்சியை கைவிடவில்லை
ஆனால்
ஈழத்தமிழர்களின் பூர்வீகம்
ஈழமண் என்று ஆராய்ச்சி பண்ணி கூறிட
யாரும் ஏன் முன் வரவில்லை....
சுதந்திர தேசமாம்
சுதந்திர தின நாட்களாம்
அரசாங்க விடுமுறையாம்
உலகமே கொண்டாடுகின்றது....
ஆனால்
ஈழத்தமிழர் சுதந்திர
காற்றை சுவாசிக்க எதிர்பார்த்து இன்னமும்
காத்துக்கொண்டே தான் இருக்கின்றனார்....
நீதியாம் நியாயமாம்
உலகெங்கும்
ஆனால்
இன்னமும் ஈழத்தமிழர் தான்
உறவுகளுக்காய் நீதி கேட்டு
ஜனவாசலிலே காத்து கொண்டுதான் இருக்கின்றனார்.....
ஜன வாசலிலே நீதி கேட்டு தான் உயிரையே
ஈன்றான் மாவீரன் ஆனால் தமிழர்
ஈழத்தமிழருக்கு நீதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
