நெஞ்சு பொறுக்குதில்லையேமண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

உவமைக்காக ஊமையான விழிகளே!
நிலவு பெண்ணுக்கு உவமையானால்
பள்ளங்கள் கறைகளாகும்...
இனி உவமையென்ற பெயரிலே
இயற்கை இழிவாக வேண்டாம்!!

பெருவிரல் இழந்த பெண்களே!
பெண்ணுக்கு பெருமை வேண்டுமா?
பெருமை என்ற பெயரிலே
பெட்டிக்குள் பிணமாக வேண்டுமா??

பெண்ணே! உன் நிலை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே - நீ
தன்னை செதுக்க நினைத்தால்
சமூகம் ஒதுக்க நினைக்கிறது
புன்னகைக்கும்
புது அர்த்தம் தருகிறது

திரிசங்கு சொர்க்கத்தின் தெருக்களில்
பிழைக்க தெரிந்த பெண்கள்
பொதிசுமக்கும் கழுதைகள்
உரிமைக்கு போராடும் பெண்கள்
உறவறுந்த விழுதுகள்...

எழுதியவர் : வீ. சீதளாதேவி (8-Feb-15, 8:51 am)
பார்வை : 157

மேலே