மனிதநேயம் வளர்ப்பது மட்டும்தான் மதமாகும்
வணக்கம் நண்பர்களே..!
இரு நண்பர்களுக்கிடையில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. கிறிஸ்துவர் வொருவர் இனியோருவர் இந்து சகோதரர். அரசு வேலையிலிருந்துகொண்டு மத பிரசங்கம் பண்ணுவது தவறு என்று இந்து சகோதரர் சொல்ல அதற்கு கிறிஸ்துவ சகோதரர் அவர் அரசு வேலையில் இருக்கிறார் ஆனால் அவர் சொன்ன கருத்து அலுவலக வேலைகள் முடிந்து நான் என இறைபணியை செய்கிறேன் என்பது எப்படி தவறு ஆகும். அதற்கு முதலாமவர் அது எப்படி "தார்மீகம்" ஆகும் என்றார். அதற்கு இவர் அவர் அவ்வாறு பணியை தவறாக உபயோகித்தது நிரூபணமானால் கண்டிப்பாக தண்டனை வழங்குவதில் தவறில்லை அதுவரை ஒருவரை தவறாக பேசவேண்டாம் என்ற வாக்குவாதத்தை நான் கவனிக்க, இருவருக்கும் நான் எடுத்து விளக்கிய எனது கருத்துரை இதோ உங்கள் பார்வைக்கும்..
நிறைகுறைகள் அறிந்துகொள்ள....
இல்லற வாழ்க்கையிலிருக்கும் ஒருவர் அரசு அதிகாரியாக பொறுப் பேற்றவுடன் அவர் காலம் முழுவதையும் அதற்கே செலவிடவேண்டு மென்பது உங்கள் கருத்து.. அப்படி பார்த்தால் ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களூடைய இல்லற வாழ்வை உதறிதள்ளிவிட்டுதான் அரசு ஊழியராக வரவேண்டும்.
தனது பணிநேரத்தில் அவர் அவ்வாறு செய்தால் என்றால்தனக்குகொடுத்த அரசு அதிகாரத்தை மக்களுக்கான சேவையை துஷ்பிரயோகம் செய்தார் என்று கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. அரசு வேலைக்கு வந்துவிட்டேன் அதனால் நான் அரசு பள்ளி, அரசு வேலை, அரசு ரேஷன் பொருள்
அரசு கழிப்பிடம், அரசு கல்லூரி, அரசு வீடு என்று எல்லாமே அரசு
என்று இருந்தால் இல்லறம் தேவையில்லை.. தார்மீகம் எப்படி
வேண்டுமென்றாலும் பார்க்கலாம். அது பார்ப்பவரைப் பொறுத்து..
தன் சொத்தை இல்லாதவருக்கு எழுதிவைப்பதும் தார்மீகம், நாட்டுக்கு எழுதிவைப்பதும் தார்மீகம்; இல்லறவாழ்வை துறந்து நாட்டுக்கு சேவை
செய்வதும் தார்மீகம், இளமையிலேயே துறவியாகி (திருமணமாகாத ஆன்மீக வாழ்வு) நாட்டுக்கும் பிறமக்களுக்கும் சேவை செய்வதும் தார்மீகம்;. இதில் இல்லறவாழ்வில் இருந்துகொண்டு அதிக நேரம் நாட்டு சேவைக்காகவும், தனது மீதிஇருக்கும் காலநேரங்களை இல்லறத்திற்காகவும், அவரவர் மனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட(தனி நபர் ஈடுபாடு) இறைவனுக்காக செலவிடுவதும் தார்மீகம்தான்..
நேரமிருந்தால் ஓசோ ஜென் துறவிகளின் வரலாற்று நூல்கள், சிவபெருமானின் திருவண்ணாமலை (அண்ணாமலை) வரலாறு, காமராஜர், காந்தி, பாரதி மற்றும் நான் கண்ட நேரில் ஆசிப்பெற்ற இந்தயுக கொடைவள்ளல் திரு. கல்யாண சுந்தரம் ஐயா (ரஜினி, தந்தையாக தத்து எடுத்துவர்) முகமது நபி, இன்னும் நிறைய பேர் கொள்கைகளை முழுவதுமாக படித்து பாருங்கள்..
உண்மைகருத்து: மனித மூளையின் யோசிக்கும் தன்மை 1/16 வினாடிகள்
இது இயல்பு.. இந்த வினாடிக்குள் அந்த சிந்தனையை மாற்றக் கூடிய அதிவேகத் தன்மை படத்தொகுப்பிற்கு (visual effect) உண்டு.. மீடியா சொன்னாதான் கேப்பான்.. நீங்க சொன்னா கேக்க மாட்டான்; நான் சொன்னா கேக்க மாட்டான்..அதுதான் ஜெனெரேசன் வேறுபாடு..! இதை நமக்கும் நம் பிள்ளைகள் இடையிலுமே நாம் காணலாம்..!எல்லா மதத்திலும் மனிதநேயம் மறந்த மனிதர்களால் எல்லா கூத்துகளும் கோமாளித்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. படம் எடுத்தால் உலகமே பேசும்.. பார்த்துவிட்டு வந்து கூறினால் பக்கத்து வீடு தெரு மட்டும் பேசும்.. அதான் வித்தியாசம்..! உண்மையில் தவறு என்று நிரூபணமானால் தண்டனை நிச்சயம். அதில் மாற்று கருத்து இல்லை. முதல் வரும் காட்சிவெளியீடு பரபரப்பு. அதுவே அடிக்கடி வாடிக்கை யாகிவிட்டால் ஒரு யதார்த்தமான செய்தி.. இதுகூட ஒரு விதத்தில் மனிதரை தூண்டிவிட்டு ஒருவரை ஒருவர் மாற்று மதத்தை குறைகூற காரணமாக்க தூண்டும் உத்தியாகக் கூட இருக்கலாம்..! இதையெல்லாம் மறந்து இயல்பான மனித வாழ்க்கையில் மதங்கள் சொல்லும் உண்மையான மனிதநேயம் , அன்பு உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் குடிகொண்டால் அதைவிட வேறு என்னவேண்டும் இந்த உலகிற்கு..?
இதைதான் கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் கருத்தாகவும் உள்ளது. அதுபோதும் நமக்குள் இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவரே என்னும் உறவில் உணர்வில் வாழ..! சிந்திப்போம்.. நண்பர்களே..!