பிரிந்தோம், சந்திக்கவில்லை
நான் --
பேதையானேனடா நான் -உன்
மேதைத்தனத்தால் உனை
நம்பியே வேதனைக்கு
இரையாகின்றேன் !!
அவன்-
என்தவூர் கலையடி?
சாகிறேன் இங்கே- என
தினம் வாழவைக்கிற
திட்டமிட்ட வட்டக் காட்சி !!
நான் --
சீரான தேகம்;மாறாது பாசம்
என்றன்று படுக்கையில் -நாம்
உலறியதை எண்ணதடுக்கும்
தள்ளாடும் இளமனசு !!
அவன்-
மயக்கம் தெளிந்தது ,
ஏக்கம் கருகியது ,
காமம் குளைந்தது -இனி(தே)
பயணமும் முற்றியது ..
நான் --
உறந்காத கண்கள் ,
கலையாத கூந்தல் ,
என் தேக வேதனைக்கு,
உனனையே சாற்றுகிறது..
அவன்-
குளம்பிய மனம்
கொந்தளித்த இதயம்
ஏற்குமா வஞ்சித்த மகளாய் !
உன்னை தினம் மறக்கிறது !!
நான் --
அடுக்கிய பாசங்களை ,
பேரலை தள்ளி விழுத்த..
மூழ்கும் என் நெஞ்சம் -இனி
உன்னை நினையாது
அவன்-
ஏமாந்து விட்டேனா?-இன்னும்
வலி அதிகரிக்குமா?
என அஞ்சியதால்-இனி
என் கன்னம் சிவக்காது