மண் பயனுறவேண்டும்கவிதைப்போட்டி
விடலைப்பருவம் முதல் என்
விரல் பற்றி நின்றவன்.
கடலளவு காதலை என்மீது கொண்டவன்.
குரும்புகள் பலசெய்து என்னை
சிரிக்க வைப்பான்.
கரும்பாய் பேசி உயிர் முழுவதும்
சிலிர்க்கவைப்பான்.
நோய் வந்து நான் படுத்தால் என்
தாய்போல காத்திடுவான்.
தோல்மீது எனைசாய்த்து என்
தோழனாய் மாறிடுவான்.
காட்டிய பொருள் எல்லாம்
வாங்கிக்குவித்திடுவான்.
காட்டாமல் தனக்குள்ளே
வலிகளை மறைத்திடுவான்.
காலையிலே கண்விழித்து
காதல் சொல்வான்.
வேலைகளை சமமாக
பகிர்ந்து கொள்வான்.
சிறுமழலை போல்என்னை
சுற்றிடுவான்.
சிறுகொடியாய் மாறி என்னை
பற்றிடுவான் .
கடலோரம் நடைபயில கைகோர்த்து
சென்று,
கரைதழுவும் அலைகளை கை காட்டிக்
கொண்டு,
அவன் செய்யும் விளையாட்டை
ரசிப்பேன்.என்
ஆயுள் வரை அவனுக்குள்
வசிப்பேன்.
தூக்கத்தில் கூட என்னைநோக்கியே
அவன் முகம் இருக்கும்.
துக்கம் என்றாலும் அவன் வார்த்தை
வருடலால் தூரபறக்கும்.
அவன் இருக்க என்வாழ்வில்
ஏது குறை?
ஆதலினால் காதல் செய்வோம்
ஆயுள் வரை..