ஏழு மணி சீரியல்

எழுமணியானால்
என்னை
முறைக்கத் தொடங்குகிறான்
அறை நண்பன் !

தொலைக்காட்சியைக்
குத்தகைக்கு
எடுத்துக்கொள்கிறேன்
என்பது
அவன் புகார் !

இதனால்
சன் மியூசிக்கின்
காதல் பாடல்களை
அவன்
மிகவும்
தவறவிடுகிறானாம் !

போனவாரம்
அவனது காதலி
அனுப்பிய
தொலைகாட்சி
குறுஞ்செய்தியை
அவன்
படிக்காமல் விட்டதில்
தற்போது
இருவருக்கும் சண்டையாம் !

" அப்படி என்னதான்
இருக்கிறது
அந்தச் சீரியலில் ? "
என்று கேட்டு
முஷ்டி முறுக்கும்
அவனுக்கு
நானெப்படிச் சொல்வேன்,
அம்மாவைப் போலவே
ஒரு அம்மா
அந்தச் சீரியலில்
இருக்கிறாளென்று !

எழுதியவர் : குருச்சந்திரன் (9-Feb-15, 11:03 am)
பார்வை : 125

மேலே