மொக்க படம்
மண்ணுக்குள்
மறைந்த பின்னும்
மக்காமல்,
சிக்கி முக்கி
கல் சொன்ன
அறிவியலை
அறைந்து சிறைப் பிடிக்கும்
வலைப் பின்னலென
மின்னல் மொழி
கூறும்
பாலிதீன் பைகளில்
மண்ணின் நுரையீரல்
மூச்சு விட முடியாமல்
தற்கொலை செய்து கொள்ளும்
காட்சிக்கு
திரைக்கதை
எழுதியவர்கள்
நாம் அனைவருமே......
படம் முடிந்த பின்னும்
அதிர்வுகள் இருப்பதில்
அடுத்த காட்சிக்கு
வந்தமரும்
அடுத்த தலைமுறை
சொல்லகூடும்......
"மொக்கப் படத்தை கூட
தப்பா எடுத்து வச்சிருக்கானுங்க"
என்று......
கவிஜி