கவியொன்றில் தேனீர்

ஏதேனும் ஒன்றை
எழுதாத இரவுகள்
படுக்கையோடு
தூக்கிச்சென்று_எனை
புதைத்துவிடக்கூடும்!!
இந்த தாள் முழுதும்
எழுதப்போகிறேன்!
நட்பை பற்றி..
நீங்களும்
இணைந்திருங்கள்
என்னோடு!!
அருவிகளில்
குளித்ததோடு
வற்றிவிடாத
நன்பர்கூட்டத்திற்க்கு
இந்த பேனா
போதாது!!
புன்னகை
இயந்திரத்தை
கழற்றிவைத்துவிட்டு
அழுகைகளை
கொட்டித்தீர்த்த
தோழ்களை
நீவிவிடவும்
இந்த இரா போதாது!!
வெறும்பரப்பொன்றில்
வானத்தை அளக்க
முடிவுகட்டிய
மூர்க்கத்தனத்தை
எந்த கவிதையிலும்
முழுமைப்படுத்து
இயலாது!!
சோற்றுக்கவளத்தில்
சுற்றிவர வாய்வைத்து
நடுப்பக்கத்திற்க்கு
கட்டிப்புரண்ட
கணப்பொழுதுகளை
கட்டி இழுக்கிறேன்
கவிக்காக!!
என்ன இது!!
என்றும் கூவாத
இராச்சேவலொன்று
இன்று என்
இந்த கவிதைக்கு
இசைகொடுக்கிறதே!!!
வாருங்கள்
உங்கள் தூங்கத்தை
கட்டிலில்
கழற்றி போட்டுவிட்டு!!
முதல் பந்தியை
உங்களில் சிலரும்!!
இரண்டாம் பந்தியை
நானும்!!
அடுத்த பந்தியை
உங்களில்
மீதமிருக்கும்
சிலரும்!!
எழுதிக்கொண்டே
செல்வோம் நட்பைபற்றி!!
வைகறை வரை..
விடிந்த பின்
தோள்களில்
கைகளை
போட்டுக்கொண்டு
பனித்துளிகளோடு
விளையாடுவோம்!!
எழுதிவைத்த
காகிதம்
தேனிரொன்றை
கொணர்ந்து தரட்டும்!!
சுவைத்துக்கொண்டே
அடுத்த இரவுக்கும்
காத்திருப்போம்...
நட்பின்
கவிதையொன்றை
எழுதிவிட..
*********************************
பொறுமையோடு
வாசித்த நண்பர்களே
அனைவருக்கும்
என் மனமார்ந்த
நன்றிகள் பலகோடி
***********************************