ஆகாசமாக அவள்

புறம்போக்கு நிலமாகக் கிடந்த
என்னை போற்றிப் புகழும் கோவில்
நிலமாக மாற்றியவள் என்னவள் !!!

என்னவென்று சொல்வேன் என்னவளுடன்
நான் கடந்த வந்த அந்த அழகான நினைவுகளை!!!

சிலைகளை முழுமையாக செதுக்கிய
பின்பு அந்த சிற்பியே பார்த்து அதிர்ந்து போகும்
அந்த அழகான தருணம் தான் என்னவளின்
பேரழகு!!!

சிதைந்து கிடக்கும் சிற்பிக்குள்
இருக்கும் முத்துப் போன்றது என்னவளின்
சிரிப்பழகு!!!

அறுவடைக்குத் தயாராக இருக்கும்
நெற்கதிர்களைப் போன்றது என்னவளின்
அந்த அழகான வெட்கம்!!!

இவை அனைத்திற்கும் மேலாக, பிறந்த
குழந்தையை கவனிக்கும் அந்தத் தாயைப்
போல குணமுடையவள் என்னவள் !!!

இவை அனைத்தும் கிடைக்கப் பெற்றவன் நான்
தினம் தோறும் வலம் வருகிறேன் முழு நிலவாக
என்னவளின் ஆகாச நினைவுகளால்...!!

எழுதியவர் : சோ.வடிவேல் (9-Feb-15, 10:41 pm)
பார்வை : 117

மேலே