உன்னால்

சந்தோசம் நிறைந்த பூமியில்
நான் சந்தித்த முகம்
நீ மட்டும்தான்

என்னவென்ற தெரியாத என் பார்வையில்
எங்கே செல்கின்றேன் என்று தெரியாத என் பாதையில்
பூக்களும் பூவசந்தமும்
தெளிக்க பட்டது உன் வருகையால் தான்

அனாதியாக கிடந்த என் தனிமையில்
அர்த்தம் மில்லாத கண்ணீரை அழிக்கப்பட்டதும்
அத்தனை நிமிடங்களையும் அழகு படுத்தப்பட்டதும்
உந்தன் சிரிப்பில்லாத நினைவுகளின் மூலம்
மீண்டும் பிறக்கிறேன் சந்தோசமாக...

உன்னோடு கைகோர்க்கும் பொழுது
இந்த மண்ணை தாண்டி
இந்த விண்ணையும் தாண்டி
பாதை வகுக்கிறேன்
அதில் நம் பாதம் மட்டும் பதிய

பித்தமாக பிடித்து விட்டது உன் முகம்
அதில் சத்தமில்லாத உன் நினைவுகள்
சந்திக்க சொல்கிறது
உன்னோடே சாகவும் சொல்கிறது

என் வாக்கியங்கள் அர்த்தமாயின
என் வார்த்தைகளில்
நீ செவிசாய்ப்பதால்...

என் வாழ்கையும் அர்த்தமாயின
உன் நிழலோடு
என் பாதையும் தொடர்வதால்...,

எழுதியவர் : காந்தி (11-Feb-15, 12:45 pm)
Tanglish : unnaal
பார்வை : 123

மேலே