மனநோய் எனப்படும் மன அழுத்தம்
தன்னை அதிகமாய்
உணர ஆரம்பிக்கும்
தருணத்தில் ஆரம்பிக்கிறது
இந்த பிரச்சினை
நிலத்தை பிளந்துவரும்
பூகம்பத்தை போல
இதயத்தை பிளந்து
வருகிறது இதுவும்
ஏதோ ஒரு
ஏனோ ஒரு
தோல்வியை தாங்க
முடியாத தருணத்தில்
ஏதோ ஒரு
இயலாமையை ஒப்புகொள்ள
இயலாத வேளையில்
ஏதோ ஒரு
ஏமாற்றத்தை ஏற்றுகொள்ள
முடியாத நேரத்தில்
ஏதோ ஒரு
உண்மையை உணர்ந்துகொள்ள
முடியாத தருணத்தில்
ஆரம்பமாகிறது இந்த
இதயத்தின் விரிசல்
எண்ணங்கள் சூடேறுகிறது
ஏமாற்றங்கள் எரிமலையகிறது
மாற்றங்கள் வருகிறது
தோற்றங்களும் மாறுகிறது
அந்த மூச்சு
வேகமாய் இரைகிறது
பேச்சு கூட
ஓய்வெடுக்க மறுக்கிறது
அந்தநேர தைரியம்
அதிகமாய் தெரிகிறது
தெறிக்கும் கோபம்
அனலாய் வருகிறது
மாறித்தான் போகிறான்
மனிதன் மொத்தமாய்
தானே கடவுள்
என்பான் அவன்
தான் சொல்வதே
சரி என்பான்
என்னடா உலகமென்று
சித்தாந்தம் பேசுவான்
எவனென்றால் எனக்கென்ன
என்று நிற்பான்
உலகை வெறுத்து
வேதாந்தமும் பேசுவான்
உறவுக்காக தன்னை
தந்ததாகவும் சொல்வான்
மாறித்தான் போகிறான்
மனிதன் மொத்தமும்
தன்னையே ஏனோ
மறந்தும் போகிறான் !
இது மனதின்
வலி தந்த காயம் தானே
இந்த மனதின்
சின்ன தடுமாற்றம் தானே
இதை தானே
உலகம் சொல்கிறது
மன நோய் என்று
எல்லா நோய்களைவிடவும்
வித்தியாசமான நோய்
இது மட்டும்
அவனை விட
அதிக வலி
இப்போது அவன்
அன்புக்குரியவர்களுக்கு மட்டும் !
பி . கு : நான் சந்தித்த தடம் மாறிய மனதை பற்றிய கவிதை இது