சயனத்தின் நேரம்
கொசுக்களைச் சுதந்திரமாய்
உலவ விட்டுவிட்டு ...
வலைக்குள் பதுங்கியிருந்தோம்
நாங்கள் ?
என் மனச்சிறகுகள்....
இரவின் நிசப்தத்தினைக் கிழித்து
ஏதோவொரு புள்ளி நோக்கி
பயணித்துக் கொண்டிருந்தது
எங்கோ தூரத்தில் ஒலிக்கும்
தெருநாயின் குரல்
மெல்ல அருகில் வருவதாய்
மெல்லிய நினைவு ...
மெல்லிய கொலுசொலியுடன்
மல்லிகை வாசமும்
அவ்வப்போது அலறலும்
சிலநேரம் ...
எங்கோயிருந்தபடி
அந்தக் கூகையும்
கெளலியும் எழுப்பும்
கூக்குரல்கள் என்காதுகளை
அடையாதிருக்கட்டும் ...
நடுநிசி தாண்டிய பொழுதுகள்
மனக்கலக்கத்தை
எழுப்பிக்கொண்டிருக்க ..
சாமக்கோடாங்கியின்...
"நல்லகாலம் பொறக்குதுவென்ற"
நம்பிக்கை வார்த்தைகள்
உடுக்கை சத்தத்தைக் கிழித்து
உள்வரை பயணிக்கிறது ..
ஆனாலும்
நான் மெல்லிய
உறக்கத்திலிருக்கிறேன் ?
--------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்