விழுதுகளில்லா ஆலமரங்கள்
விழுதில்லா ஆலமரங்கள் !
ஒளியில்லா முழுநிலவுகள் !
அமைதியாய் ஆழ் மனதோடு
அழுது கொண்டிருக்கும் ஆண்டவர்கள் !
கருவறையில் சுமக்கையிலே
கனவும் கூட கண்டிறாள் -உன்
கல்யாண பந்தலிலே கூட
கற்பனையும் செய்திறாள் !
கட்டிகொண்டவள் மாற்றிவிட்டாள் என்ற
கடைநிலை கருத்துக்கு அர்த்தம் இல்லை
உன்னை பெற்றெடுத்தவர் உனக்கல்லவோ
பெரியவராய்த் தெரியவேண்டும் !
முத்தாய் மூன்று பிள்ளைகள்
சொத்தெல்லாம் அவர்கள் பார்வையில்
சொற்பமகி போக -
சிற்பமாய் செதுக்கினார்கள்
சிறுகல் அவர்களையும் !
பணம் சினமென்ற பேயிற்கு முன்னே
மனம் குணம் எல்லாம் ஒளிந்து கொள்ளும் காலமிது !
அப்பனிடம் ஒன்றுமில்லை
ஆண்டியவன் அருகில் நின்றால்
பெர்பெரிய மனிதர் நம்மால்
நிற்பதற்கும் கூசுமல்லோ?
இப்படியும் மகன் நினைத்தான்
நிர்கதியாய் விட்டு சென்றான் !
மாதமானால் சொற்பமாய் பணங்கள் கொஞ்சம்
நிர்கதியற்ற நடைபிணங்களுக்கு !
பெற்ற தாய் கொடுத்த தாய் பாலுக்கிங்கே
உற்ற விலையும் அவன் கொடுத்தே விட்டானாம்
இனி ஒன்றும் கொடுப்பதர்க்கில்லை
என்னிடம் ஒன்றும் எடுப்பதற்கில்லை என்கின்றரனன் !
பெருஞ்சுமைகள் தங்கைகள்
விரும்பி நானும் பேசினால்
விலை கொடுக்க வேண்டி வரும்
ஆடி என்பர்,சீமந்தம் என்பர்,சீர் என்பர்,முறை என்பர்
நல்லதோர் முடிவு
உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை இனி !
அன்று கதறி அழும் தங்கையவள்
கண்ணீர் துடைத்து கையிலே சுமந்த அண்ணனுக்கு
காலம் உருண்டு காசு பையை நிறைத்தவுடன்
நடிகையாய் தெரிகிறாள் !
குற்றங்கள் பல நிரூபிக்க பட்டதில்
குற்றவாளி தங்கைக்கு தண்டனை
பேச வேண்டாம் என்பதே!
தாயுமவள் புலம்புகின்றாள்
தாய்ப் பாலுக்கிங்கே
விலைக் கொடுத்த
தனயனவன் என்பிள்ளை
தரணியிலே இப்படியோர்
தங்கமகன் பிறந்ததில்லை !
முத்தாய் மூன்றைப் பெற்றேன்
ஜான் பிள்ளை இது - என்
ஆண் பிள்ளை என்றே திளைத்தேன்
இட்ட முட்டையை கோழி பார்ப்பதற்கு முன்
கோமகனின் தாட்டிலிட்டேன்
கோழியின் சாபமோ இது?
இப்படி ஓயாமல் காரணம் தேடினாள்
தங்கமகன் தமை மறந்து போனதற்கு !
மற்ற இரண்டும் ஆணாயிருக்க கூடாதா
அந்திமாக் காலம் அவஸ்தை இல்லையே !
ஒன்றை பெற்றதற்கே ஓலமிட்டு அழுகையிலே
மற்றிரண்டும் உனக்கெதற்கு ஒப்பாரியை பெருக்கிடவோ ?
காசைக் கொடுக்க முடியாவிட்டாலும் -பெண்கள்
பாசம் கொடுத்தல்லவா உன்னை தேற்றுகிறார்கள்?
மாதா ,பிதா ,குரு ,தெய்வம்
மறந்தனன் மானுடன் இங்கே !
பெற்றவனெல்லாம் பித்தனடி -இங்கு சில
பிள்ளைகளெல்லாம் எத்தனடி !
சொத்தெல்லாம் பிள்ளை என்றாய் -இன்று
வெற்றாய் இருக்கும் அப்பா
வேண்டாம் என்கிறது பிள்ளை !
பொழுதெல்லாம் கடவுள் முன்னே
கடைசி காலம் கண்முன் தெரிவதற்குள்ளே
சேர வேண்டும் மகன் தம்முடன்
கோரிக்கை மட்டும் இது ஒன்றே !
வேண்டுகிறேன் நானும் இங்கே
பிள்ளைகளே புரிந்திருங்கள்
வீட்டிலே தெய்வங்கள் இருக்க
கோவிலுக்கு நீங்களும் சென்றால்
நன்றாய் உற்றுப் பாருங்கள்
கடவுள் உங்களைப் பார்த்து
கை கொட்டி சிரிப்பார் !-நீ
உண்ணும் போதோ உறங்கும் போதோ
எண்ணும் போதோ எழுதும் போதோ
விழும் போதோ எழும் போதோ
தப்பி தவறி எப்போதேனும்
உங்கள் உணர்வில் - உங்களை
உலகிற்கு அளித்தவர் வந்தார் எனில்
உணர்ந்துக் கொள்ளுங்கள் -அவர்கள் இப்போது
விழுதுகளில்லா ஆலமரங்கள்!!!!!!!!!