குழந்தையின் அழுகுரல்

தொட்டிலுல தூக்கமுன்னு நினைச்சிருந்த,
குப்பதொட்டியில தூக்கமுன்னு நினைச்சதில்ல...!
உன் விரல்கள் தழுவாத மேனிய இப்போ,
ஈக்களும் வந்து,
தழுவுதடி..
எறும்பு என்ன கடிக்குதடி,
கழுகு வட்டம் அடிச்சுகிட்ட,
என் கழுத்துக்கு இலக்கு வைக்குதடி...
என் அழுகுரல் உனக்கு கேட்கலைய.......?
என் எச்சில் முத்தம் என்ன,
உன் முகஅழக,
கெடுத்திடுமா.. ?
அம்மா...............
உனக்கான உன் உசுர இப்போ.. .. .. .. ..