அம்மாவின் அரவணைப்பு
திடீரென அம்மாவின் அணைப்பு,
தீயாய் என்னில் பற்றியெறிய,
தீயை அணைக்க தாயில்லை ,
தீயாய் சுட்டது கண்ணீர்......
அன்பின் அரவணைப்புக்கு ஏங்கித்தவித்தேன் ...
அணைத்தேன் அக்காவை ...கிடைக்கவில்லை...
அணைத்தேன் அண்ணனை... கிடைக்கவில்லை ...
அணைத்தேன் தம்பியை... கிடைக்கவில்லை...
அணைத்தேன் அப்பாவை, கிடைக்கவில்லை...
அணைத்தேன் கணவனை, கிடைக்கவில்லை....
கடைசியில் கிடைத்தது என்னவோ
கண்ணீர் துளிகள் மட்டும் ஏக்கமாக .......
இனிஒரு பிறவியிலாவது கிடைக்குமா ?...
மீண்டும் ஒரு கண் உறக்கம், உன் அன்பான அரவணைப்பில்.....
தவிக்கிறேன்,... ................................என் அம்மா......
தவழும் குழந்தையாக உன் அணைப்பிற்கு .....