தாய்

மண்ணில் பூத்த பலகோடி
பூக்கள் சொல்லும் ஒரு
வார்த்தை அது அம்மா.
பத்து திங்கள் மடி சுமந்து
சுவனச்சோலை சங்கமித்து
தாய் பட்ட வேதனை யாரும் அறிந்ததுண்டோ?
வலிமைக்கு பால் தந்தவளே!
பாசத்தால் என்னை காத்தவளே!
ஆயிரம் முத்துக்கள் நெய்தாலும்
தாயினை பால் வருமா?
பள்ளிக்கு என்னை கூட்டிச்செல்வா?
நிலாசோறு ஊட்டி விடுவா?தோளினில்
எனை அணைத்து மடியினில் தூங்க
வைப்பா.அதுவும் ஒரு காலம்.
விண்ணுக்கு தாலாட்டுப்பாட அம்மா
இல்லை.தூவுது மார்கழி கண்ணீர்மழை.
கோபத்தில் என்னை தூற்றுகையில்
என் கண்கள் அவள் பார்த்து ஆனந்தக்
கண்ணீரில் என்னை தாலாட்டுவாள்.
வாழ்க்கையில் தோல்விகள் தொடர்ந்தாலென்ன?
காதலி எனை விட்டு போனாலென்ன?அமைதிக்கு
என் அம்மா மடியில் தூங்கயிலே சோகம் எனை
நீங்கும்.சாந்தம் எனை நாடும்.கல்லறைக்கு நீ
போகயிலே!அடிக்கிற வெயிலுக்கும் நனைக்கிற
குளிருக்கும் குடையாய் நான் வருவேன்.