தாய் - தந்தை

கவிதை...
சிறு துளி விழுந்து
பல உயிர் சிதைந்து
ஓர் உயிராக உன்னை சேர
உந்தன் பெண்மைக்கு இலக்கணமாக
உன் உயிர் அறையில்
தஞ்சம் அடைந்தேனடி...
தன்னை அறியாமல்
தாகம் உணராமல்
கணப் பொழுதும் உறங்கி அசையாமல்
விழியாக என்னை காக்க
விரதம் மேற்கொண்டாயே தாயே...
துணை நின்று ஈருயிரை
காக்கும் ஒற்றை ஜீவன்
உன்னையும் என்னையும் நினைத்து
கணம் கணம் இன்புறும் தந்தையே.,
பத்து திங்கள் பனிவிழும் இரவுகள்
பல நாள் நான் அசையும்
சிறு அசைவில் ஆனந்தம் கொண்டாயே
உன் உணவில் என் உயிரை வளர்த்து
முழுவடிவம் கொடுத்தாயே தாயே...
நீ அசைந்து இசைக்கும் அழகிலே
உன் வயிற்றில் முகம் புதைத்து
களிப்படையும் எண்ணத்திற்கு
வேறு அதிசயம் இந்த உலகில் இல்லை என்று
ஆனந்தத்தை அனுபவித்தாயோ தந்தையே...
உன்னை காயப்படுத்திய உணர்வு
என் இதயத்தை துளைத்ததோ
தெரியவில்லையடி
உன்னில் இருந்து வருகையில்
என் கண்கள் குளமாகுதடி
வீறிட்டு அழுது உன் துயர் துடைக்க
பிறந்தேனடி தாயே...
செல்ல சிரிப்பை ரசித்து
மழலை பேச்சில் உரையாட
உன் விரல் பிடித்து நடக்க
உன் ஜாடையில் புது உருவாய்
தோளில் உறவாடி
இன்பமாய் உன் பெருமை
போற்ற பிறந்தேன் தந்தையே...