ஏக்கம்

கவிதை...

கண்களோடு பேசும் சில நிமிடங்கள் போதும்
வாழ்நாளும் மீண்டும் பிறக்கின்ற நேரம்
உயிரோடு நானும் உரையாடும் போது
இதழோடு சேர்ந்து இதயமும்
தடுமாறி துடிக்கும்
உதடுகள் சொல்லாத நிகழ்வை
விழியோடு வழியும் உப்பு நீர் உரைக்கும்
சோகத்தை சுமந்து உயிரின் ஆழம் வரை
உணர்வுகளில் கரைந்து வெளிப்படும்
மெளன மொழியின் பிறப்பிடமே
விழிகளின் வாசல் தான்
என்னோடு தான் விலகாத மேகம்
இமையோடு தான் உறவாடும் சோகம்
வெண்மேக கூட்டங்கள் வீதியுலா செய்து
என் விழி வீட்டிற்கு வருகை செய்ய
கண்ணீரும் கன்னம் கடந்து
கழுத்தோடு பாதையமைத்து
வெந்நீராக கீழே விழுகையில்
மண்ணுக்கு உணர்விருந்தால்
மடியினில் ஏந்தியிருக்கும்
உணர்வில்லாத துகள்களாக
என் வேதனையை காயவைத்தது
சில சமயம் கண்களில் இருந்து
காற்று வீச கண்டேன்
அக்னியின் உறைவிடமாக
கண் நீர் வற்றிப்போய்
மனதோடு சேர்ந்து விழியும்
வெற்றிடமாக வறண்டு போனது
மேற்கே உதித்த சூரியனும்
கிழக்கே முளைக்கயில் பிறக்கும்
புது பிறப்பின் கீற்றை போல
ஒளி கிடைக்கும் வாழ்தலிலோ
வாழ்தலின் முடிவிலோ
வாழ்நாளும் பிரகாசிக்க...

எழுதியவர் : பிரபு ரஞ்சி (12-Feb-15, 1:08 pm)
சேர்த்தது : பிரபு ரஞ்சி
Tanglish : aekkam
பார்வை : 85

மேலே