கண்கொண்டு கடத்தும் திட்டமோ

** ** வில்லென புருவம் கொண்டு
பார்வை அம்புகள் எடுத்து
** ** இதயம் துளைக்கும் எண்ணமோ
** ** காற்றுத் துகள்களுக்குள் புகுந்து
சுவாச நாளங்களில் உருண்டு
** ** உயிரில் கலக்கும் எண்ணமோ
** ** மல்லிகை மலர்களை தூவி
கைகொண்டு எடுக்கும் முன்
** ** கண்கொண்டு கடத்தும் திட்டமோ
** ** வார்த்தையில் வசியம் வைத்து
செவிப்பறைக்குள் படை எடுத்து
** ** போதை ஏற்றும் திட்டமோ
** ** நொதிகளில் மாற்றம் செய்து
நரம்பிலைக்குள் நகர்ந்து சென்று
** ** மச்சம் காணும் எண்ணமோ
** ** நிழலோடு நிழல் கலந்து
நிசப்தம் அதை மறந்து
** ** நினைவாக உருமாற எண்ணமோ
** ** மலரோடு எனை சேர்த்து
மனதோடு அதை கோர்த்து
** ** மணவாட்டி ஆகும் எண்ணமோ
-- கற்குவேல் .பா