என்னோடு நீ

நண்பனே..
இந்த இரவு நாம் நடத்தும்
கலந்துரையாடலுக்கு
சாட்சியாய் இருக்கப் போவதில்லை..
அதனால்..நாம்
உண்மைகள் மட்டுமே பேசுவோமே..
முதலில் நான் சொல்கிறேன் ..
நீ கேள்..பிறகு பேசு..
நான் கேட்கிறேன்..
நான் பேசுவதை நீயும்
நீ பேசுவதை நானும்
ஒப்புக் கொள்ள வேண்டிய
அவசியம் இல்லையென்றாலும்..
ஒப்புக்காவது கேட்டு வைப்போமே..
எனக்கு யாருமே தேவையில்லை..
எனக்கு புத்தி சொல்ல இங்கு எவருமில்லை..
நீ செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை..
எனக்கு பிடிக்காதவைகளையே நீ எப்போதும் செய்வதால்..
நான் புத்திசாலி தெரியுமா..
நான் ஒரு மூடனும் கூட..
குழைந்து பேசும் குணமுள்ளதால்..நான் கோழை..
எனக்குள் நானே இல்லை..
உனக்குள் நீ இருக்கிறாயா?
எனது அடையாளமே..
அடையாளம் என்று எதுவும் இல்லாதிருப்பதே..
நீ யார் எனக்கு..
நான் யார் உனக்கு..
கேட்டால்..
என்னோடு கூடவே எப்போதும் இருக்கும்
என் பகுத்தறிவு என்று சொல்வாய்..
எப்போதாவது உன் பேரை
மாற்றிக் கொண்டிருக்கிறாயா..
இன்னும் பேசுவேன்..
இப்போது..
வேண்டாம்..
நான் உறங்க செல்கிறேன்..
உனக்குத்தான் உறக்கம் என்பதில்லையே..
வழக்கம் போல்..
இப்போதும் சொல்கிறேன்..
நீ பேச வேண்டாம்..
சும்மா இரு..!

எழுதியவர் : கருணா (12-Feb-15, 2:00 pm)
Tanglish : ennodu nee
பார்வை : 206

மேலே