முதுமை வலி
முதுமை வலி
வளர்த்து வந்த மரமடி...
வாழ்ந்த காலம் சொல்லுதடி...
காட்டு வழி பள்ளியடி...
கற்றது மனதில் நிற்குதடி...
எழுத மனதும் துடிக்குதடி...
கையில் தடியோ.. ஆடுதடி...
கயல்விழி கன்னி நீயடி...
காளை போல் திரிந்தேன் நானடி...
ஒத்தையடி... பாதையடி...
முன்னாடி நீயும் போனயடி...
பின்னாடி ஒடி வந்தேனடி...
இந்நாளும் நீயும் போறயடி...
முழங்கால் வலியோ... கூடுதடி...
மணநாள் கண்டேன் உன்னையடி...
மறுநாள் இன்று போல் தோனுதடி...
குமரியும் கிழவியும் நீயடி...
குமரனும் கிழவனும் நானடி...
கணவன் மனைவி நாமடி...
உடல்கள் இரண்டும் வேறடி...
உள்ளம் என்றும் ஒன்றடி...
வெயிலுக்கடியில்... வேளையடி...
வேப்பமரத்தடி நிழலடி...
நிழல் சேரவிடா உழைப்படி...
ஒவ்வொன்றாய் கிழித்தாலே நாளடி...
நாட்காட்டி தீர்ந்தாலே வருடமடி...
கிழிக்காத பக்கங்கள் கொஞ்சமடி...
மழலை குரல் கேட்க கெஞ்சுதடி...
தவமாய் பெற்ற பிள்ளையடி...
முதுமை இல்லம் சேர்த்ததடி...
மகனின் வருகைக்கு காப்போமடி...
பேரன் குரலை கேட்போமடி...