காதலர் தினம்
காமத்தைச் சொல்ல துணிவில்லாதவன்
காதலைச் சொல்லி முன்னேறுகிறான்
காதலைச் சொல்லி முன்னேறியவன்
மன்றாடி மார்பில் இடம் கேட்கிறான்
பள்ளியில் அரும்பும் காதலை
திரையரங்கில் திறக்கிறான்
கல்லூரியில் முளைக்கும் காதலை
கடற்கரையில் கரைக்கிறான்
மணம் முடிந்து வரும் காதலை
மறைவிடத்தில் திறக்கிறான்
உன் சதை மேயும் ஒரு ஆணும்
உடை மறந்த உன் உடலும்
வலைதளத்தில் வாய் பேசும்பொழுது
வருந்தி துடிக்கிறேன்
உன் அண்ணனாய்
உன் தம்பியாய்
உன் உறவுக்காரனாய்
உன் தந்தையாய்............