காதலியே

கவிதை...

மெளனம் என்ற ஒன்று மட்டும்
மருந்தாகி போகாதடி
விழிகள் என்னும் கதவுகள்
திறக்காமல் வாழ்க்கை இல்லடி
உன் இதழ் புன்னகையில்
மரணம் வென்றிட கூடுமே
முரண்பாடான எண்ணம் உனக்குள்
முடிவின்றி தொடங்குதே
முடிவில் நீ உதிர்க்க
என் உதிரம் உருகுதடி
எங்கணம் உரைப்பேன் உன்னிடம்
நீ இன்றி என் உயிர்
நீண்டு போகாது என்று
வாழ்க்கையின் பாதை நீள
உன் நினைவோடு நானும்
விலகாமல் நடந்தேன்
உனக்கென்று நானும் உடையாமல் போக
முழு வர்ண கண்ணாடியாக
உன்னை பிரதிபலிக்கிறேனடி
உன்னை சொல்லி என்ன செய்ய
உன் உளவியலில் புதுமை
உன்னோடு நான் இருக்கேன் என்று
உள்ளத்தில் இருந்து உரைத்தாலும்
உதடுகள் சில நேரம்
கடிந்து கொள்ளத்தான் செய்கிறது
கட்டியணைத்து முத்தமிட சில தருணம்
உன் இதழ்கள் துடித்தாலும்
விழிகளில் உண்மை குழையுதடி
மார்போடு சாய்ந்து கொள்ள
உன் மடியிலே துயில் கொண்டு
உன்னோடு தான் உயிராவேனடி
ஒவ்வொரு துடிப்பிலும் உனக்காக
இதமாக துடித்துகொண்டிருப்பேன்
உன் முகம் மலரும் தருணத்திற்கு
தவமிருக்கிறேனடி என்னவளே...

எழுதியவர் : பிரபு ரஞ்சி (12-Feb-15, 2:32 pm)
சேர்த்தது : பிரபு ரஞ்சி
Tanglish : kathaliye
பார்வை : 94

மேலே