உனக்காகவே

ஒவ்வொரு நிமிடமும்
எனக்காக இல்லாமல்
உனக்காக துடிக்கிறது
என் இதயம்.

எந்த நொடியும்
என் நலம்
நினைக்காமல்
உன் நலத்தை நினைக்கிறது
என் மனது.

என்னை கடந்து
போகும் காற்றிலும்
உன் வாசம்
திருடும் என்
சுவாசம்.

இறக்கபோகும்
நிமிடத்திலும்
வழிய துடிக்கும்
உன் கண்ணீரை
துடைக்க நீளும்
என் விரல்கள்
அன்பே!


உணமையான காதலை உள்ளத்தில் வைத்து வாழும் காதலர்களுக்கு "காதலர் தின வாழ்த்துக்கள்".

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (13-Feb-15, 5:18 pm)
Tanglish : unakaakave
பார்வை : 136

மேலே