♥♥♥♥♥♥♥♥♥♥ காதலை சொல்ல வந்தேன் ♥♥♥♥♥♥♥♥♥♥♥
அன்றைய விடியல் எனக்கனாது
சூரியனை தட்டி எழுப்பி விடியலுக்கு
அழைப்புக்கொடுக்கச் சொன்னது என் மனம்...!
தேடி தேடி எடுத்து வைத்தேன் வார்த்தைகளை
எப்படி ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று
ஓர் திரை நகர்த்தி பார்த்தேன்.
புதிதாய் பூத்த ரோஜவை தரலாம் - என்றால்
நேற்று பூத்த ரோஜவுக்கு என் யுக காதலை
பற்றி எப்படி தெரியும்...!
அழகு பொருளை முன்வைத்து தெடரலாம் - என்றால்
உன்னிடம் சேர்க்கும் அழகு பொருள் என்னை தவிர
வேறொன்றும் இல்லை..! என்னிடம்.
இப்படி சொல்லாம் அப்படி சொல்லாம் - என்று
ஆயிரம் வழிகள் வந்தாலும் - உன்
விழி பார்த்தால் வந்த வழியையே மறந்து போகும்
இதில் எங்கு நான் பேசுவது ...!
முடிவாய் மூச்சு இழுத்துக்கொண்டேன்
என் காதலை என் கனவுகளை என்னை தவிர வேறயராலும்
மொழிபெயர்க்க முடியாது - அதை
உன்னை தவிர வேறயரலாலும் படிக்க முடியாது...!
உருண்டோடிய வருடங்கள், கடந்து சென்ற காலங்கள்
அத்தனைக்கும் தெரியும் - நான் எத்தனை முறை
காதலை சொல்ல வந்து தோற்றுப்போனவன் என்று...!
அதில் இன்றும் ஒரு நாள் சேர்ந்துக்கொண்டது .
மீண்டும் இன்னொரு விடியலில்
வருகிறேன் என்று பார்வையில்
சொல்லிவந்தேன் அவளிடம்....♥
எப்போதும் போல் குனிந்த தலை நிமிரமால்
நடைபோட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்
நான் காவலனாய் வீதியிலே நின்றேன்
அவள் மனதுக்கும்.....♥
ஃ தங்கம்