என்னவளுக்கு காதல் தினப் பரிசு - உதயா
அழகென்ற சொல்லே
வன்கண் கொள்ளுமடி
மொழிபேசும் உந்தன்
சல்லாபம் விழிகளுக்கு
முன்பே !!!!!!!
ஆரலான ஆதவனும்
ஆதங்கம் அடைவானடி
தேன்சிந்தும் உந்தம்
செவ்விதழ்கு முன்பே !!!!!!
வெண்மை நிறம்கொண்ட
மதியும் வெந்துப் போவானடி
ஒளிவீசும் உந்தம்
மல்லி கன்னத்தின் முன்பே !!!!!!
தொலைக் கொண்ட வானும்
விசும்பி போகுமடி
விண்மீனாய் ஜொலிக்கும்
உந்தன் முக அணிகலன்
முன்பே !!!!!!
முல்லை மலர்க்கொண்ட
கொடியும் முறிந்துப் போகுமடி
வளைக் கொண்ட உந்தன்
இடையிற்கு முன்பே !!!!!!!
பசுமை வளம் கொண்ட
வளமும் வாடிப் போகுமடி
பல நிறமான உந்தன்
ஆடைக்கு முன்பே ?????
மென்மை உடலக் கொண்ட
தென்றலும் தேய்ந்துப் போகுமடி
புவிபடாமல் நடைப்பொடும் உந்தன்
பாதத்தின் முன்பே !!!!!!!
அலைக்கொண்ட கடலும்
அமைதிக் கொள்ளுமடி
நல்மணம் வீசும் உந்தன்
புன்னகைக்கு முன்பே !!!!!!
விடலைப் பருவமான
என் மனமும் குழந்தையாகுமடி
எம்மை அரவணைக்கும் உந்தன்
பாசத்திற்கு முன்பே !!!!!!
(என்னவளுக்கு என் காதலர் தினப் பரிசு எவ்வாறு உல்லதுயென சொல்லுங்கள் நட்பே ...............)