அவளைப் பாட

ஆதவனின் கரங்கள் கொண்டு
தீட்டப்பட்ட அழகிய கூர்வாள்கள்
அவளது விழி இமைகள் !

தேய்ப்பிறை இல்லாமல் என்றும்
ஜொலிக்கும் பூரண சந்திரன்கள்
அவளது விழிக் கருக்ககோளங்கள்!

வான் மேகங்கள் வரம் கேட்டு
தீண்டக் காத்துக்கிடக்கும்
அவள் தீச்சுடர் பாதங்கள் !

ஒருமுறையாவது உன்
கைவிரல் பிடித்து நடந்திட
ஏங்கித் தவிக்கும் விண்மீன்கள் !

தென்றல் காற்று வரையற்ற
காலங்கள் தவங்கொண்டு
தீண்டத்துடிக்கும் உன் கூந்தல்கள் !

இதுவரை கண்டறியவில்லை
அவளது கடைவிழி அழகை
கவியில் வடிக்கும் வார்த்தைகள் !

இருந்தும் நான் முயல்கிறேன்
அந்த முழுமதி நிலவை
முதலில் பாடிய கவிஞாகும் பேறுபெற!!!!!

எழுதியவர் : நா.அன்பரசன் .. (14-Feb-15, 9:04 am)
Tanglish : Avalaip paata
பார்வை : 89

மேலே