வலன்ரைன் தின வாழ்த்து

பத்து மாதம் கருவிலே
பக்குவமாய் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
பாசமாய் அன்பு செய்வதும்
காதலே!

அன்பாக அரவணைத்து
அறிவுரை கூறிடும்
அன்புத் தந்தையை
ஆசையாய் அன்பு செய்வதும்
காதலே!

உதிரத்தை பங்கு போட்டு
ஓர் தாயின் வயிற்றில்
ஒன்றாக பிறந்த
உடன் பிறப்புகளை
பாசமாய் அன்பு செய்வதும்
காதலே!

ஒன்றாக கதை பேசி
சோகங்களை பகிர்ந்து
இன்புற்றிருக்கும் நண்பர்களை
ஒருமனமாக அன்பு செய்வதும்
காதலே!

பால் வடியும் முகத்தால்
ஆயிரம் கதை பேசும்
பச்சிளம் பாலகரை
பரிவாக அன்பு செய்வதும்
காதலே!

பல கனவுகளோடு
பாரினிலே குழந்தைகளை
பெற்றெடுத்து வளர்த்து
தளர்ந்து போய் இருக்கும்
முதியவர்களை
கௌரவமாய் அன்பு செய்வதும்
காதலே!

உயிருக்கு உயிராக
உணர்வுகள் சங்கமிக்க
ஒரு மனப்பட்டு
புரிந்துணர்வாய் வாழும்
வாழ்க்கைத் துணையை
மனதார அன்பு செய்வதும்
காதலே!

பருவ வயதினரிடம்
கட்டிளம் பருவத்தினரிடம்
இதயத்தில் பற்றிக்கொள்ளும்
பாசமான உணர்வு பரிமாற்றத்தை
புனிதமாக அன்பு செய்வதும்
காதலே!

காதலுக்கு உண்மையான
அர்த்தமே அன்பு செய்தல்
அன்புக்கு வடிவங்கள்
ஆயிரம் இருந்தாலும்
அன்பு செய்யும் உள்ளங்களுக்கு
வடிவம் ஒன்றே
அனைவரும் காதல் செய்யுங்கள்
அன்பு உள்ளங்களை!

எழுதியவர் : அன்புடன் அருந்தா (14-Feb-15, 9:09 am)
பார்வை : 59

மேலே