காதலர் தின செய்தித் துளிகள் - சிரிக்க மட்டும்

காதலர் தின செய்தித் துளிகள் - சிரிக்க மட்டும் :0 :) :(

ஓசூர் ரோஜாக்களின் வருகை
உள்ளூர் மல்லிகள் எதிர்ப்பு
மதுரையில் பரபரப்பு

காதலிக்காக ஆன்லைனில் ஆர்டர்
கடல் கடந்து வந்த
ரோஜா மரணம்

காதலை ஏற்க மறுத்த
காதலிக்கு ஆசிட் வீச்சு
காதலன் வெறிச்செயல்

வற்புறுத்தலின் பெயரில் காதல்
காதலி கொடுத்த பரிசில்
விச பாட்டில்

காதலர் தின சிறப்பு
பூங்கா புதருக்குள் முத்தமிட
காவலர்கள் காவல்

மடத்தில் காதல் பெயரில்
காம லீலை - காமகேடி
சாமியார் கைது

காதல் செய்றது நல்லதுங்க
கதர் வேட்டி நாராயணனின்
கலக்கலான பேட்டி

கட்டில் மறைவில் ஒளிந்திருந்த
கள்ளக் காதனுக்கு அரிவாள்வெட்டு
நான்காம் கணவன் வெறிச்செயல்

ஆசிரியருக்கு காதல் கடிதம்
சத்தியமா நான் கொடுகளைங்க
கதறுகிறார் கணக்கு வாத்தியார்

கம்பனின் வரிகளை திருடி
வடித்த காதல் கடிதம்
ஏற்க மறுத்தார் வீராங்கனை

அரசியலும் காதலும் ஒன்னு
எதிர்கட்சித் தலைவர் ..........
விறுவிறு பேட்டி

காதலுக்கு கற்பு எதற்கு
கோபத்துடன் குமுறுகிறார்
குபுகுபு நடிகை .................


-- கற்குவேல் .பா :)

( ** குறிப்பு - இந்த படைப்பு எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிட படைக்கப்பட்டது அல்ல ..
** விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது )

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (14-Feb-15, 11:12 am)
பார்வை : 1458

மேலே