காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

கருமைநிற பெண்டிரை கண்டால்
எந்த ஆடவர் மனமும் கிறங்காதோ?
பேரழகிகள் என்றாலே ஒவியனே! -உன்
தூரிகையும் புறக்கணிக்கும் நிறம் கருப்போ?

எனதருமை மச்சானே..!
கருகரு நிறத்து எறுமை மாடு
கறக்கும் பாலும் வெள்ளைதான் - உன்
கருப்பழகி நான் காதல்கொண்டு
ஏங்கும் உள்ளமும் வெள்ளைதான்.

கருப்பு என்று வெறுப்புக்காட்டும்
என் ஆசை அத்தைமகனே..!
கருமையடர்ந்த உன் தலைக்கேசத்தில்
அந்த வெள்ளைகிளியை ஏன் வெட்டினாய்?
ஒ ! வெள்ளை என்பதும் தீட்டோ?

ஒ ! ஆதவனே..!
கொஞ்சம் உன் உக்கிரத்தை கூட்டு !
கவிஞர்கள் வர்ணிக்கும் சிவப்பழகிகள் யாவரும்
வெந்து வெந்து கறுத்து போகட்டும்..!

பாரதியே..! ஆதிதாளத்தில்
இன்னொரு முறை பாட்டுபாடுவாயா?
’காக்கைச் சிறகினிலே நந்தலாலா ’என்று,
கருப்பால் வேகும் மனம் சாந்தமடையட்டுமே..!.
-------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (15-Feb-15, 10:53 am)
பார்வை : 105

மேலே