காக்கைச் சிறகினிலே இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

காக்கைச் சிறகுபோல காக்கவொரு கரம்வேண்டும்
நோக்கும் பார்வையிலே நோகாதிருக் கவேண்டும்
யாக்கை இறந்துமிது வாழ்ந்திட வேண்டும்
தூக்கிச் சென்றபின்னும் தீபமாக வேண்டும்

பட்டமரம் கண்டுதுடிக்கும் பாசம் வேண்டும்
வெட்டவெளி நிழல்போலே நாமிருக்க வேண்டும்
வட்டச்சுனை அதுபோலே வாழ்வினித்திட வேண்டும்
கட்டுமரம் போலே கட்டான உறுதிவேண்டும்

காரிகையர் கண்ணீருக்கு கார்மழையாய் அழவேண்டும்
காரீயம் போல்படர்ந்த கசடுகளைய வேண்டும்
முல்லைப்பூ நாட்டில் சொற்பந்தல் போடும்
வில்லாதி வீரர்களை விரட்டியடிக் கவேண்டும்

கொள்ளை அடித்தேய்க்கும் குள்ளநரி கூட்டம்
எல்லைப்புறம் தள்ளி எரித்தழிக்க வேண்டும்
வள்ளல் மனம் போல வாடு பயிர் கண்டு
எல்மேனி உருகி இரங்குமனம் வேண்டும்

கல்மனம் துறக்கும் நல்மனம் வேண்டும்
கள்ளம் விலக்கும் வுள்ளம் வேண்டும்
காக்கைச் சிறகுபோல காக்க வேண்டுமந்த
காக்கைச் சிறகாவே காத்திடவும் வேண்டும்

எழுதியவர் : சுசீந்திரன் (15-Feb-15, 12:28 pm)
பார்வை : 91

மேலே