காக்கைச் சிறகினிலே

விளையாட்டு வீரன்
நம்பிக்கையோடு சொல்லியிருந்தான்..
இந்தக் குழைமம்
புறஊதாக் கதிர்கள் தடுக்குமென....

அந்த வருட அழகியும்
மற்றொரு பசையெடுத்து
அதுதான் அவளின்
சிகப்பழகுக்குக் காரணமென்றாள்....

நட்சத்திரங்கள் பலரும்
இந்தத் திரவத்தினால்தான்
தங்கள் கூந்தல்
மின்னுவதாகச் சிரித்தார்கள்....

பொய்கள் எல்லாம்
பொய்கள்தானென
உண்மையைச் சொல்லியிருந்தது
அப்போதுதான்
உதிர்ந்திருந்த ஓர் காக்கைச் சிறகு....

எழுதியவர் : நல்லை.சரவணா (15-Feb-15, 12:34 pm)
பார்வை : 150

மேலே