காக்கை சிறகில்லை - இன்னும் சில நொடிகளில் - போட்டிக்கவிதை
கண்டவுடன் அருவருப்புற கருமைஎன்ன கழிவோ ?
கருப்பாய் இருப்பதென்ன மனிதற்கு இழிவோ ?
அழகென் பதென்ன வென்பதுநான் சொல்லவேணுமோ ?
நிழல்கூட கருமையே அதுஉன் துணையில்லையோ?
கல்லாதார் அவ்வாறுஎண்ணுவது சரியென் றாகும்.
பாரதிகவி படித்தநீ நினைப்பது முறையோ ?
இயல்பினில் நிறமதற்கு பொருளேது மில்லை.
நாகரிகமென்று நாசத்தில் மூழ்கி விட்டீர் .
வெண்மையாய் இருப்பினது காக்கை சிறகில்லை..
நீ நீயாய் இல்லையேல் உனக்கேதும் அடையாளமில்லை .!!!