இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை -காக்கைச் சிறகினிலே

பார்க்கும் நிறத்தினிலே பாகுபாடு வேண்டாம் -
பாரதியின் நேர்த் திறத்தைக் காணுங்கள் ;
ஊர்கூடி தேரிழுத்தல் ஊழலை ஒழிக்கும் -
உரத்த குரல் காக்கைகளாக ஒன்றாயிருங்கள்;
கொள்ளைகள் அதிகமென கூப்பாடு போடாதீர் ;
வேலைகளை அரசே உண்டு பண்ணுங்கள் ;
காதலிப்பதுதான் வேலையென எண்ணாதீர் -இளைஞர்களே
காப்பகத்தில் பெற்றோரை சேர்த்து விடாதீர் ;
சாதி மதம் பார்த்துப் பழகாதீர் ;-
சாதிக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர் ;
போதை அரக்கனிடம் மாட்டாதீர் -நல்ல
பாதை சொல்லி குடிகாரர்களைத் திருத்திடுங்கள் ;
எந்த தொடக்கத்தையும் நல்லதாகவே பாருங்கள்-
பந்தபாசத்துடன் பலருடன் பேசி வாழ்ந்திடுங்கள் ;
--------------------------------------------------------------------------------
இந்த கவிதை என சொந்த கற்பனை யில் உருவானதுஎன உறுதி அளிக்கிறேன் -நாதன் பிரகாஷ் ,அலை பேசி ;-9944412677;

எழுதியவர் : நாதன் பிரகாஷ் (15-Feb-15, 12:48 pm)
பார்வை : 64

மேலே