காக்கைச் சிறகினிலே- இன்னும் சற்று நொடிகளில் கவிதை போட்டி

காக்கைச் சிறகினிலே- இன்னும் சற்று நொடிகளில் கவிதை போட்டி

நானோ அண்டங்காக்கை
உணா்த்துகிறேன் மனிதாின் போக்கை
கருமை கொண்ட நிறம்
பொறுமை கொண்ட மனம்!

எங்களை கல் வீசி எறிந்த போதும்
உங்கள் வீட்டிற்கே தினமும் கரைந்தோமே
நீவிரோ கருமை கொண்ட மனதால்
கழுத்தறுத்தே பல உயிரை கரைத்தீரே!

ஒரு படி சோறு கிடைத்தாலும்
ஒன்றாக நாங்கள் பகிா்ந்து கொள்வோமே
நீவிரோ ஒரு அடி நிலத்திற்கே
பிறஉயிரை பகிர்ந்தே இன்பம் கொண்டிரே !

எங்களுக்குள் சாதிகள் இல்லை
சாதி பெயா் சொல்லி சாக்கடையாய்
அசிங்கப்படுத்துவதே உங்களின் தொல்லை!

எங்களுக்குள் ஒன்று இறந்தால்
வலியால் மனம் துடிப்போமே
நீவிரோ கட்டிய மனைவியை வதைத்தீரே
பணத்தை அபகாித்தே குடியாய் குடித்தீரே!

இப்படி ஊனம் படிந்திருக்கும் உங்களிடம்
ஊன் உண்ண மனமில்லை
அடுத்த கிரகத்தை தேடி
உல்லாசமாகவே பறக்கிறேன்
இந்த காக்கைச் சிறகினிலே!

எழுதியவர் : சபியுல்லாஹ் (15-Feb-15, 12:50 pm)
பார்வை : 134

மேலே