இன்னும் சற்று நொடிகளில் காக்கைச் சிறகினிலேகவிதைப்போட்டி
காக்கைச் சிறகினிலே எந்தன் தோழா-இரவின்
காரிருளை துடைத்ததடா எந்தன் தோழா
யாக்கும் கவிதையெல்லாம் எந்தன் தோழா
எத்தர்களை சாடுமடா எந்தன் தோழா
பூக்கும் கருத்துகளும் எந்தன் தோழா
புண்களை மாற்றிடுமே எந்தன் தோழா
தாக்கும் மடையர்வந்தால் எந்தன் தோழா
தமிழ் மொழி ஆயுதமாய் காக்கும் தோழா
எத்தனையோ மதமிருந்தும் எந்தன் தோழா
யாவரும் இந்தியரே எந்தன் தோழா
எத்தனையோ மொழியிருந்தும் எந்தன் தோழா
யாவருக்கும் கருணைமொழி எந்தன் தோழா
புத்தன் பிறந்த நிலம் எந்தன் தோழா
பூமிக்கே வழிகாட்டும் எந்தன் தோழா
சத்திய சோதனையா எந்தன் தோழா
சாத்தியமே காந்தியைப்பார் எந்தன் தோழா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
