மதுவிலக்கு அரசே அதை ஒதுக்கு

"சொல்லடா மனிதனே கருவற்றப் பல பெண்ணின் இறப்பும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே பெற்றப் பல பிள்ளைகளின் பட்டினியும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே வளர்ந்தப் பல பிள்ளையின் சீரழியும் இந்தக் கணவனின் குடியில்"

இந்த மதுவிலக்கு தேவையா?


" சொல்லடா மனிதனே திருமணம் முடிந்த பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லுகிறாள்
எதோடு பத்து சவரனோடு

இரண்டுநாள் கழித்து அதே வீட்டிற்கு வருகிறாள்
எதோடு வெறும் கழுத்தோடு"

இந்த மதுவிலக்கு தேவையா?

"சொல்லடா மனிதனே அவளது காதில் மிச்சம் இருந்ததோ கம்மல்
அதையும் தேடிக் கண்டான் அந்த ராச்சசன்!
அதையும் விற்கிறான்! குடிக்கிறான்!

இப்படி அவனது எண்ணம் எல்லாம் மதுவில் நுழைய,
இப்படி பாசம்,குடும்பம் பலவற்றையும் அவளும் அவளது பிள்ளையும் இழக்க,
இப்படி பசியும் வலியும் அதிகரித்து பாவம் அவளது எண்ணம் எல்லாம் இன்று வெறும் கண்ணீர்தான்""

இந்த மதுவிலக்கு தேவையா?


" சிந்திக்கிறாள் பலமுறை இனி இருப்பதோ உயிரோ!
இந்த உயிரோ! என் பிள்ளைக்கு"

" வேலைக்கு செல்கிறாள்,
பிள்ளையின் பசியை போக்குகிறாள்"

"இந்த தகவலை அறிந்த அந்த ராச்சசனின் எண்ணம்!
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவளின் உயிரை பறித்தது!"

"தன் தாயின் இறப்பை கண் எதிரே பார்த்த பையனின் இதயமோ துடித்தது
அந்த ராச்சசனின் என்னமோ! முடிவில் நிறைவேறியது!"

"பின்பு கவலை அதிகரித்து ஆளாகினான்
அந்தப் பையனும் இந்த மதுவோடு!"

இப்போது சொல்லடா மனிதனே
இந்த மதுவிலக்கு தேவையா?BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI..............

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (15-Feb-15, 6:29 pm)
பார்வை : 133

மேலே