யவன முத்திரை
கயல்விழிக் கதிர்வீச்சின்
பொற் தையல்
பின்னலில்
அறுந்து கிடந்தயெனது
அம்புராத் துணிகளின்
கிழிசல்கள் நிரப்பி
நீயுனது
யவனத்தின் முத்திரைகளால்
எனது உயிர் தொட்டு
இட்ட
உயிரொப்பந்தப் பத்திரப்
பரியந்தத்தில் -
தொடரும் ஏழேழு ஜென்மங்களையும்
எழுதி வாங்கினாய் !
உனது ராஜவீதிகளில்
வார்த்தைகளின்றி
வெற்றுப் பொழுதுகளின்
மேடு பள்ளங்களில்
எனது ரதம்
தடம் புரண்டு
அச்சுடைந்து குடைசாய்கையில் -
அச்சாணியாய்
நீயுனது
மணி விரல் நுழைத்து
ரதமியக்கிய
விசைகள் அனைத்திற்கும்
இயக்கமென்பது
காதலன்றி " - வேறென்ன பெண்ணே ?