எல்லாம் உனக்காக …

உன்னைக் காணத் தான்
காலமும் வேகமாக சுழல்கிறதோ …!

உன்னை நினைக்கத் தான்
எனக்கு கனவும் வருகிறதோ …!

உன்னுடன் பேசத் தான்
மொழிகளும் இனிக்கிறதோ …!

உன்னைக் காதலிக்கத் தான்
ஆதாமும் என்னை அனுப்பிவைத்தானோ …!

இத்தனையும் உனக்காக நடக்கும் பொழுது
என்னை மட்டும் ஏனடி காதலிக்க மறுக்கிறாய்
என் அன்பே …!

எழுதியவர் : ராஜா (16-Feb-15, 9:20 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 419

மேலே