விழியோரம் இதயவலியுடன் காத்திருக்கிறேன் 555
பெண்ணே...
நீ செல்லும் பாதையில்
தினம் காத்திருந்தேன்...
நீ போகும் பாதையிலும்
காத்திருந்தேன்...
உன் அழகு முகம்கான...
பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
காதல் என்னும் மலர் பறிக்க...
தாமதமாக வந்தவளே...
நீ வந்ததும் தெரியவில்லை
உதிர்ந்ததும் தெரியவில்லை...
தென்றலாக பூப்பறிக்க
என்னுள் வந்தவள்...
புயலாக சாய்த்தவிட்டு
சென்றுவிட்டாய்...
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
வாழ மண்ணில் இடமிருக்காது...
பெரியோர்கள் சொன்னார்கள்...
வந்தவள் தங்கவிட்டால்
உயிர் நின்று விடுமென்று...
யாரும் சொல்லவில்லையடி...
பூப்பறிக்க வந்த நீ
சென்றுவிட்டாய்...
என்னை போலவே சில
நேரங்களில் எட்டி பார்க்கிறது...
என் விழியோரம்
சில நீர் துளிகள்...
அன்று சாலையோரம்
பாதங்களில் வலியுடன் காத்திருந்தேன்...
இன்று விழியோரம்
இதயவலியுடன் காத்திருக்கிறேன்...
நீ மீண்டும்
வந்துவிடுவாய் என்று.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
