என் ஆறுதலே ……………
கத்தினாய்
கதரினாய்
கண்ணீரும் விட்டாய்
உன் காதலுக்காக
என் உயிரே ……………..!
கண்மூடித்தனமாக நம்பினாய்
காலமெல்லாம் வாழ்வோமென்று
கடைசிவரை நான் வாருவேனென்று
கல்லறையில் காத்திருக்கிறாயே
என் காதலே ……………..!
தனிமையில் மாட்டிக்கொண்டு
தனியாகத் தவிக்கிறேனடி
தாயாக இருந்த உன்னை
தெரிந்தே தொலைத்தேனடி
என் அன்பே ……………..!
தேடிச் சென்றேன் உன்னை விரட்டிய இடத்தில்
தேடாதே என்றிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்கமாட்டேன்
தொந்தரவு செய்யாதே என்று கேட்கும் பொழுது
தொலைத்தக் காதலைப் புதைத்துவிட்டாய் என்று புரிந்துகொண்டேனடி
என் ஆறுதலே ……………..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
