கல்யாணம்
தாலியில் இல்லை சூக்ஷமம்
தலையில் பதியுது சம்ப்ரதாயம்...
ஒரு நாள் கூத்து மற்றவருக்கு
நாளெல்லாம் கூத்து தம்பதியர்க்கு...
பிடித்த கல்யாணம்
பிடிக்காத கல்யாணம்
ஏதோ எப்படியோ நடக்க
பிள்ளை குட்டி மட்டும் ஏராளம்...
பெயருக்காகச் சேர்ந்திருக்கும் தம்பதியர்
தினம் செத்து செத்துப் பிணமாகும்
தியாக பிரம்மங்கள்...
பிடிக்காமல் விலகும் தம்பதியர்
தனித்து வாழவும் முடியாத
அடாவடி அதிரடிகள்...
ஊமைக் கொட்டான்களாக
இரு உயிர்கள் ஒரே வீட்டில்
நாற்காலியோடு நாற்காலியாய்...
பண்பாடு படுத்தும் பாடு
பல பேரை பிணமாக்கும் கோடு
தாண்டவும் முடியாமல்
தத்தளிக்கும் கூட்டத்தின்
மௌன அலறல்கள்
சில நேரம் வெளியே கேட்கிறது
நட்பு வட்டாரத்தில் மட்டும்...
இரண்டு நல்லவர்களுக்கு நடுவிலும்
ஒத்துப் போவது அரிதாகும்...
கல்யாணம் ஒரு தீர்வல்ல
பிரச்சனைகளின் தொடக்கம்...