பெண்ணே விலகு
புலரும் பொழுதில் பனியில் நனைத்த
மலரென்பார்.மாதுன்னை இன்னும் சிலரோ
நிலவென்பார். நீயோ நிலம்பார்த்து நிற்க
பலதும் நினைப்பார் பசித்து.
கொடியாய் படரும் உனக்கோர் மரமாய்
மடியும் வரையில் இருக்கத் துடியாய்த்
துடிப்போர் துடிப்பின் மடிமேல் சரிந்தால்
விடிவு உனக்கோர் இருட்டு.
திலகம் ஜொலிக்கும் திடலாம் நுதலில்
நிலவாய் மலரும் நினைவோ டுலவும்
உலகாய் வரவே உயிராய் நடிப்போர்
சலனம் அறிந்து விலகு.