இதயம் திணித்து மன்னிப்பு கோரல் - உதயா

நீ மன்னிப்பு கேட்பது

உன்னால் வெறுக்கப்பட்ட இதயத்திடம் அல்ல
உன் வெறுப்பால் வேந்தேப் போன இதயத்திடம்

உன்னால் மறக்கப்பட்ட இதயத்திடம் அல்ல
உன்னால் மாய்ந்தேப் போன இதயத்திடம்

உன்னால் நினைக்கப்பட்ட இதயத்திடம் அல்ல
உன்னால் நிற்கதியாய் போன இதயத்திடம்

உன் உருவத்தை பதித்த இதயத்திடம் அல்ல
உன்னால் உடைத்தெரியப்பட்ட இதயத்திடம்

உன்னை சுமந்த இதயத்திடம் அல்ல
உன்னால் சுட்டெரிக்கப்பட்ட இதயத்திடம்

ஆயினும் மன்னித்து செல்கிறேன்
நீ உன் இதயத்தை என்னுள் திணித்து
காதலிப்பதால்

எழுதியவர் : udayakumar (17-Feb-15, 6:35 pm)
பார்வை : 116

மேலே