நினைவு
மேகமிலா நீல வானம்
-------------------பௌர்ணமி திங்கள்
மரத்தடி நிழல்
------------------உறங்கும் மழழை
கொட்டும் அருவி
-----------------அதனருகே குயிலோசை
காலையில் மழைச்சாரல்
-----------------எதிர்பாரா பரிசுமழை
சிவந்த கதிரோன்
----------------மாலையில் வானவில்
இணைபிரியா ஜோடிப்புறா
----------------இணையஏங்கும் தண்டவாளம்
யாருமிலா மண்பாதை
---------------எவருமிலா தனிமை
அன்னையின் மடி
--------------அழுகும் மழழை
துள்ளி விளையாடும் அணில்கள்
இன்று பூத்த முல்லை
இன்று விட்ட தளிர்
இன்று பிறந்த குழந்தை
சல சல வெனவோடும் நீரோடை
அது இல்லாமல் நீந்தும் மீன்கூட்டம்
நான் பார்க்கும் கண்ணாடி
பால் குடிக்கும் கன்று
தனியாய் நிற்கும் மரம்
அதில் ஊஞ்சலாடும் சிறுமிகள்
துரத்தி விளையாடும் வண்ணத்து பூச்சிகள்
நள்ளிரவில் கடிகார ஓசை
பால் கறக்கும் சத்தம்
உழைத்து பின்வரும் உறக்கம்
கொஞ்சும் மழழை முத்தம்
இத்தனையும் உந்தன் நினைவின் பிம்பமடி
இவைகளோடு உன்னை மறப்பது எப்படி ?
மறப்பது அரிது கண்ணே - உன்னை
மறப்பது அரிது இவைகளில்லாது போயினும்....!!!!!