இதயம்

இதயம்

ரெட்டினாவில் அவளின் பிம்பத்தை உள்வாங்கும் நேரம்
நாசிகளில் ஆக்சிஜனும் தடுமாறித்தான் உள்புகும் !!!!

72 நொடிகள் துடிக்கும் இதயம் கூட
பள்ளத்தாக்கு வீழ்ச்சியையும் - செங்குத்து ஏற்றத்தையும் துடிப்பினில் மாறி மாறி உணர்த்திடும் !!!!

தொண்டைகுழியில் புதிதாய் உருளும் உருளையால்
வார்த்தைகளில் சுரம் சேராமல் உதடுகள் மூச்சு வாங்கும் !!!!!

அவளை கண்ட நொடிகள்
0.0004 நொடிகளில் ஞாபகத்தை வெளிபடுத்தும் மூளை கூட மூலையில் முடங்கிவிடும் !!!!

இளமையில் ஹார்மோன் கலப்பு இதயம் வரை இருந்தால் - காதல் !!!!
இடுப்பு பகுதி தாண்டி நீண்டால் - காமம் !!!!

எழுதியவர் : ராம்குமார் (18-Feb-15, 5:44 am)
சேர்த்தது : Ram Kumar1111
Tanglish : ithayam
பார்வை : 101

மேலே